About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday, 24 November 2013

கவிதைகள்


 

 சிலந்தி வலை

இணைய  தளத்திலும்


காணவில்லையே! உன் வலைக்குள்

எப்படி நுழைவது என்று!



கோவில்

 


எல்லோரும் சமம்

என்று  ஒருநாளாவது

வாய்திறந்து சொல்லிவிடு!

உன் சன்னிதானத்திலாவது!

விரைவாய்!!

கண் தானம்


இவ்வுலகில் விழி இழந்தோரின்

எண்ணிக்கை இலட்சத்தில்

இருக்க! இறுதி உதவியாய்

செய்வோம் கண் தானம்!!!

Friday, 22 November 2013

கவிதை


                             மழைத்துளி

 

       வெளியில் எங்கும் மண்வாசனையைப்

          பரப்பி சிறு சிறுத் தூறல்கள் சேர்ந்து அந்த

        மெல்லிய வெள்ளிக் கம்பிகள் தடிமனாகி

         பூமித்தாயின் மேல் போர்த்தியது தண்ணீர்க்               

            கம்பளமாய்! பூமியை குளிர்விக்க!

Wednesday, 18 September 2013

சிறுகதை- கனம்


                                                         
 
 
 
 
          அந்த வீட்டின் முன்னால் இருந்த மரம் நன்றாக வெட்டப்பட்டு இருந்தது. என்ன நடேசா நான் ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள  ஏன் இப்படி மரத்த வெட்ட வீட்டீங்க? ஏன் இப்படி பண்ணினீங்க? என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்கும் அப்பாவைப் பார்க்கும் போது மனதிற்கு என்னவோப் போல் இருந்தது.

      அப்பா அடுத்த நாள் பக்கெட்டில் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து அதற்கு ஊற்றினார். என்னங்க இப்படி ஊத்தறீங்க? மழை வேறப் பெஞ்சிக்கிட்டு தானே இருக்கு என்று அலுத்தபடி சித்ரா உள்ளே செல்ல என் மனம் கனத்தது.

         அன்று மரம் நடும் விழாவை நினைத்துக் கொண்டேன். என்ன பாலு எத்தன மரக்கன்னு வந்திருக்கு? ஒரு ஐந்நூறு இருக்கும்! சரி! சரி அதல்லாம் எங்க எங்க நடணும்னு  யோச்சி வெச்சிட்டீங்களா? அதல்லாம் பக்காவா யோச்சிவெச்சிட்டோம் என்று பாலுவும், முருகனும் ஒவ்வொன்றாக  எண்ண ஆரம்பித்தனர்.

          கொஞ்ச நேரத்தில் விழா ஆரம்பிக்க யேய்! பாலு! ஏ!  இன்னமும் சாப்பிடாம இருக்க! இந்தா ரெண்டு இட்லி! ஒன்னும் சாப்படாம வந்திட்டேன்னு அம்மா என் கையில குடுத்து விட்டுச்சு! என்று என் அத்தை மகள் பூங்கொடி  அந்த பொட்டலத்தை என் கையில் குடுத்தாள். நான் அவசர அவசரமாய் அவள் குடுத்த இட்லியை என் வாயில் திணித்துக் கொண்டேன்.

       முதல் கன்றை அந்த  அதிகாரி நட, எங்கள் தெருவெங்கும் மரக் கன்றுகள் நடப்பட்டன. நான் முருகன் என்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு ஒவ்வொன்றாக நட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டின் முன்னால் நாங்கள் கன்றினை எடுத்து வந்ததும் ஒரு நிமிஷம் பாலு இத நானும் நீயும் சேந்து நடலாமா! என்று பூங்கொடி சொல்ல பாலு சரி என்றான். டேய் இந்தாடா தண்ணி! என்று தாய் மரகதம்  சொல்ல இருவரும் சேர்ந்து அந்த கன்றினை நட்டனர்.

     மழைக் காலத்தில் நட்டதால் கன்றுகள் பிழைத்துக் கொண்டன. என்ன பாலு! உனக்கும் பூங்கொடிக்கும் எப்ப கல்யாணம்? அதான் உனக்கு அவ! அவளுக்கு நீன்னு எப்பவோ முடிவுப் பண்ணிட்டாங்க இல்ல! என்று ஒரு நண்பன் ஆரம்பிக்க! இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் என்று பாலு வெட்கத்தில் தலையை கவிழ்த்திக் கொண்டான். என்ன சார்! என்ன சொல்றீங்க? என்று தெருமுனையில் பூங்கொடியின் அப்பா நல்லக்கண்னு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். சில நிமிடங்களில் தலையில் அடித்துக் கொண்டு ஓட நானும் நண்பர்களும் விரைந்தோம். பக்கத்தில் உள்ள பிரதான சாலையின் ஒரு ஓரத்தில் மக்கள்  மொய்த்துக் கொண்டு இருக்க எல்லாரையும் விலக்கிக் கொண்டு நான் முன்னேற என் பூங்கொடி தலையில் இரத்தம் சொட்டியபடி பிணமாகி இருந்தாள்.



       ஒரு வாரம் கழித்து..       என்னங்க  இங்க  வந்துப்   பாருங்க!   என்று என் மனைவி சித்ரா தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி வாசலுக்கு இழுத்துச் சென்றாள். அங்கே வெட்டப்பட்ட மரம் அழகாய் துளிர்த்து வரத் தொடங்கி இருந்தது. பக்கத்தில் இருந்த கட்டிடத்தில்  நாளை மரம் நடும் விழா துவக்கி வைப்பவர்  மாவட்ட செயலாளர்.திருமதி.  பூங்கொடி அவர்கள் என்ற  அறிவிப்பு பலகை என்னைப் பார்த்து சிரித்தது.



 

                      

Monday, 8 April 2013

கவிதை- மழை



                                                               


   




                  

                      மேகம் என்கிற தாய்
                 மின்னலைக் கொண்டு
                அடிக்க !  கோவம் கொண்டு
                  அதன் மடியில் இருந்து
                 குதித்து விட்டது   மழை
                   என்னும் குழந்தை
                   பூமித்தாயை  நோக்கி!
      

Saturday, 16 March 2013

கட்டுரை- புகையிலை



                

                                      

          

         
    உலக  புகையிலை ஒழிப்புத்தினம்   மே 31ம் தேதி  கொண்டாடப்படுகிறது. புகையிலைப் பொருட்களான சிகரெட், சுருட்டு, புகையிலைத் தூள் போன்றவை மனிதனுக்கு பெருமளவில் ஊருவிளைப்பவை ஆகும். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் மரணங்கள்  ஆண்டிற்கு  இலட்சக்  கணக்கில் நிகழ்கின்றன என்கிறது  ஒருப் புள்ளி விவரம். இருபாலருக்கும் வெற்றிலைப் பாக்கோடு வாசனைக்கு  புகையிலையையும்  சேர்த்து   சாப்பிடும்    பழக்கம்    சர்வ   சாதாரணமாய் உள்ளது. இது  விரைவில் வாய்ப் புற்று நோய்க்கு வழிவகுக்கும். ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும்பொழுது அதில் உள்ள    நிக்கோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடு போன்றவை  உடலுக்கும், உயிருக்கும் ஊருவிளைப்பவை   ஆகும்.  இவை மேலும் நாற்பது  வகையான புற்று  நோய்   ஏற்பட  காரணமாய்  அமைகின்றன. எண்பது விழுக்காடு   புற்றுநோய்    புகைப்பிடித்தலால் வருவது ஆகும். மேலும் நுரையீரல் பாதிப்படைதல்,   இரத்த நாளங்கள் சுருங்கி மாரடைப்பு, இரத்தம் உறைதல் போன்ற பாதிப்பையும்  ஏற்படுத்தும். அருகில் இருப்போருக்கும் இப்புகை பாதிப்பை  ஏற்படுத்தும். எனவே, புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால்  மனிதனுக்கு  ஏற்படும்   பாதிப்புக்கள்   பற்றிய விழிப்புணர்வு   மிக   மிக  அவசியம்  ஆகின்றது.
   புகையிலைப் பொருட்களை   அறவே   தவிர்த்து   நம் ஆரோக்கியத்தை  பேணுவோம்!


Sunday, 24 February 2013

சிறுகதை- டாக்டர் நேரம்



                                    



         அந்த ஆஸ்பத்ரிக்கி  நான் போகும் போது அதிக நோயாளிகள் இல்லை. என்ன சார்? டோக்கன் வாங்குங்க!  என்று நர்ஸ் கத்தபடி என் பேரை எழுதிக் கொண்டார். நான் என்ன சிஸ்டர்? ஏன் குரல் டல்லா இருக்கு? நல்லா சாப்பிடுங்க! என்றேன்.
          அவருக்கு முகம் பிரகாசம் ஆனது. தேங்கஸ் சார்! என்று உற்சாகத்துடன் வேலைப் பார்த்தார்.
           ஒன்று இரண்டு மூன்று என வரிசையாய் சென்றுக் கொண்டிருக்க டாக்டரின் முகத்தில் சந்தோஷம் இல்லை. என்ன சார் ? காய்ச்சலா? என்றேன் அருகில் இருந்தவரிடம்! ஆமா சார் ஒரு வாரம் ஆச்சு! வேலைக்கிப் போக முடியல என்றார் கவலையில்! கொஞ்ச நேரத்தில் கூட்டம் வந்தது. சிலர் இன்றைய பொழுது ஓடிவிடும்! என்று புக்கு படிக்க இருக்கா? என்று பெரிய புக்காக வாங்கி சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தனர். சிலர் இன்னும் எவ்ளோ பேர் இருக்காங்க? என்று முள்ளின் மேல் நிற்பதைப்  போல் நர்சிடம் ஒவ்வொரு அரைமணிக்கும்  கேள்வி கேட்டனர்.
       எனக்கு பின்னால் வர வேண்டிய  பெண்மணி தன் இரண்டுக் குழந்தைகளை வைத்துக் கொண்டு   கவலையில் உட்கார்ந்துக் கொண்டிருக்க இந்தாங்க! பாவம்!எனக்கு அவசரம் இல்லை. உங்க டோக்கனை குடுங்க! என்று அவர் டோக்கனை வாங்கிக் கொண்டேன். அவர் முகத்தில் அத்தனை  சந்தோஷம்! என்னமோ ஒரு வீட்டை நான் ஃபிரியாக குடுத்தது மாதிரி மகிழ்ந்தார்.

       என்ன சார்? லேடீஸ்க்கு மட்டும் தான் நீ வாங்கின டோக்கனைத் தருவீங்களா? எங்களுக்குத் தர மாட்டீங்களா ?என்று 28ம் டோக்கனை வைத்துக் கொண்டு ஒருவர்  துக்கத்தில் கேட்க கேட்க சரி! என்று குடுத்துவிட்டேன். அவர் சாமியைப் பார்ப்பதுப் போல் மிகச் சந்தோஷமாய் உள்ளே நுழைந்தார். என்ன சார்  4 லிருந்து 28ம் நம்பருக்கு போயிட்டீங்க?! என்று நர்ஸ்  கேட்டது எனக்கு மிகவும் பிடித்தது.
       ஒரு வழியாக எல்லாரும் கடைசியாக போன போது என் முறை வந்தது.  டாக்டரிடம் சார் தப்பா நினச்சுக்காதீங்க?  உங்களுக்கு லவ் மேரேஜா? அரேண்ஜ்டு மேரேஜா என்றேன்? சிரித்துக் கொண்டே  அரேண்ஜ்டு மேரேஜ் என்றார். உங்களுக்கு என்ன என்ன உணவு வகைகள் பிடிக்கும் என்றேன்  மிகவும் சந்தோஷமாக பதில் சொன்னார். என்ன சார் இவ்ளோ கடைசியா வந்தும் ஜாலியா  இருக்கீங்க? என்றார் டாக்டர். ஆமாம் சார்! ஒருப் பத்து பேருக்கு முன்னாடிதான் வரலான்னு நினச்சேன் முடியல!  நீங்களும் ஒரு முக்கால் மணி முன்னாடியே ரிலாக்ஸ் ஆயிருப்பீங்க? என்றேன்.  என்ன சார்  என்னால உங்களுக்கு  இன்னிக்கி  சந்தோஷம் கிடச்சிச்சா? என்றேன் .ஆமாம் என்றார். எனக்கு ஒன்னும் இல்ல! என்னமோ இன்னைக்கி  இந்த ஹாஸ்பிடலில் இருக்கறங்க எல்லாம் சந்தோஷமாக  இருக்கறமாதிரி இருக்காங்க! என்று விரைந்தேன்  நான் ஒரு   டாக்டர் என்பதையும் மறந்து!