உலக புகையிலை ஒழிப்புத்தினம் மே 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. புகையிலைப் பொருட்களான சிகரெட், சுருட்டு, புகையிலைத் தூள் போன்றவை மனிதனுக்கு பெருமளவில் ஊருவிளைப்பவை ஆகும். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் மரணங்கள் ஆண்டிற்கு இலட்சக் கணக்கில் நிகழ்கின்றன என்கிறது ஒருப் புள்ளி விவரம். இருபாலருக்கும் வெற்றிலைப் பாக்கோடு வாசனைக்கு புகையிலையையும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் சர்வ சாதாரணமாய் உள்ளது. இது விரைவில் வாய்ப் புற்று நோய்க்கு வழிவகுக்கும். ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும்பொழுது அதில் உள்ள நிக்கோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடு போன்றவை உடலுக்கும், உயிருக்கும் ஊருவிளைப்பவை ஆகும். இவை மேலும் நாற்பது வகையான புற்று நோய் ஏற்பட காரணமாய் அமைகின்றன. எண்பது விழுக்காடு புற்றுநோய் புகைப்பிடித்தலால் வருவது ஆகும். மேலும் நுரையீரல் பாதிப்படைதல், இரத்த நாளங்கள் சுருங்கி மாரடைப்பு, இரத்தம் உறைதல் போன்ற பாதிப்பையும் ஏற்படுத்தும். அருகில் இருப்போருக்கும் இப்புகை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியம் ஆகின்றது.
புகையிலைப்
பொருட்களை அறவே தவிர்த்து நம்
ஆரோக்கியத்தை பேணுவோம்!