சிலந்தி வலை
இணைய தளத்திலும்
காணவில்லையே! உன் வலைக்குள்
எப்படி நுழைவது என்று!
கோவில்
எல்லோரும் சமம்
என்று ஒருநாளாவது
வாய்திறந்து சொல்லிவிடு!
உன் சன்னிதானத்திலாவது!
விரைவாய்!!
கண் தானம்
இவ்வுலகில் விழி இழந்தோரின்
எண்ணிக்கை இலட்சத்தில்
இருக்க! இறுதி உதவியாய்
செய்வோம் கண் தானம்!!!