அதிக
உடல் எடை இரத்த அழுத்தம், மாரடைப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மூட்டு வலியையும் ஏற்படுத்தும். எனவே, உடல் எடையை கட்டிற்குள் வைத்துக் கொள்வது நல்லது. எண்ணைப் பண்டங்கள் , இனிப்பு பண்டங்கள் முதலியன உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடல் எடைக்கும் உயரத்திற்கும் முக்கிய தொடர்பு உண்டு. ஒருவரின் உயரம் 153 செ.மீ என்றால்
அவரின்
எடை 53-55 ஆக இருக்க
வேண்டும்.
உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள்:
1. வாரத்தில் ஒருநாள்
வாழைத்தண்டு சாறு பருக வேண்டும்.
2. காலையும், இரவும் சப்பாத்தியையும் பகலில் கொஞ்சம் சாதம்,
நிறைய
காய்கறிகள்
ஒரு சப்பாத்தி என சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நடுவில் ஆப்பிள் , சாத்துக்குடி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
3. வாழைப்பழம், மாம்பழம்,
பலாப்பழம்
போன்ற
அதிக
கலோரிகள்
கொண்ட பழங்களை
தவிர்ப்பது நலம்.
4. அதிக உடல் எடைக் கொண்டவர்கள் மூன்று
வேளையும் இரண்டு
சப்பாத்தியுடன்
காய்கறிகள் சேர்த்து சாப்பிட எதற்கும் குறையாத உடல் எடைக் குறையும்.
5. யோகாவும், நடைப்பயிற்சியும் உடலையும் உள்ளத்தையும் பலம் சேர்க்கவல்லவை. இவ்வாறாக, நான்
13 கிலோவை
குறைத்து உள்ளேன்.