ஆட்டிசம் என்பது குழந்தைகளில் காணப்படும் ஒரு இறுக்கமான மனநிலை ஆகும். இதனைப்
பற்றின விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி
உலக
ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பிறந்த 24 மாதங்களுக்குள்
குழந்தையின் மனநிலையை அறிந்து அதற்கான சிறப்பு பயிற்சி குடுக்கப்படும்
பொழுது அந்தக் குழந்தையின் குறை நீக்கப்படுகிறது.
இதனை தாய் எளிதாக கண்டறிந்துவிடலாம். குழந்தை
தாயின் கண்களைப் பார்த்து சிரிக்காமல் போதல், எல்லாரிடமும் பேசவோ பழகவோ தயங்குதல்,
பேச்சுத் தாமதம் அல்லது சொல்லவருவதை ஜாடையில் சொல்ல முடியாமை, விளையாட்டில் ஆர்வமின்மை,
அதிக சுறுசுறுப்பு அல்லது அதிக மந்தத்தன்மை எந்தப் பொருளையும் சுட்டிக்காட்ட மறுத்தல்
அல்லது முடியாமல் போதல் , காயம் பட்டால் வலியை உணராமல் இருத்தல்,
அருகில் இருந்து எதைக் கேட்டாலும் காது கேட்காதததைப் போல் பதில் சொல்லாமல் இருத்தல்,
எந்தப் பொருளையும் வித்தியாசமாக கையாள்தல், விபத்துக்களை உணராமல் இருத்தல், சுழலும் பொருட்களின் மேல் அதிக ஆர்வம், ஏதாவது ஒரு வார்தையையோ அல்லது வாக்கியத்தையோ திரும்ப திரும்ப அர்த்தம் புரியாமல்
சொல்லிக் கொண்டு இருப்பது , கைகளை உதறிக் கொண்டே இருத்தல் போன்றவை இவற்றின் அறிகுறிகள்
ஆகும்.
மேற்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் இது ஆட்டிசத்தின்
அறிகுறிகள் ஆகும். இது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு
ஆகும். இது மனவளர்ச்சிக் குறைபாடு அல்ல. இவர்கள்
அதிபுத்திசாலிகளே! இவர்களிடம் அதிகத் திறமை காணப்படுகிறது. உதாரணமாக ஆட்டிசம் பாதிப்படைந்த ஐஸ்வர்யா என்கிறப் பெண்ணால் குறுக்கெழுத்து புதிர்கள்
எவ்வளவு கடினமாக இருந்தாலும் சராசரி மனிதனைவிட வெகு விரைவில் முடித்துவிடுவார். இதைப் போல ஆட்டிசம் பாதிப்படைந்த எல்லாக் குழந்தைகளிடமும்
ஒவ்வொருத் திறமை இருக்கும். இதை வெளியேக் கொண்டு வருவது பெற்றோரின் மற்றும்
பயிற்சி ஆளரின் கையில் உள்ளது. இந்தியாவில் ஆட்டிசம் பாதிப்படைந்த குழந்தைகள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு சிறப்புப்
பள்ளி தேவை இல்ல.
சிறப்பு பயிற்சி மட்டும் போதும். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான கருவியை ஐ.ஐ.டி. முன்னாள்
மாணவர்
அஜீத் நாராயணன் என்பவர் உருவாக்கி உள்ளார்.
சமூகம் மேற்க்கண்ட குழந்தைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கும்
பொழுது அவர்களையும், பெற்றோரையும் அரவணைத்து
செல்லுதல் வேண்டும்.