About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

20659

Sunday, 9 September 2018

கதை- வீடு

அந்த  வீட்டினை நான்   நெருங்கும்   போது    மாலை    ஐந்து  மணி ஆகிருந்தது.        சார்!   வாங்க!  வாங்க! என்றார்   சேகர்!  வாடகையை  வாங்கிக்       கொண்டு   புறப்படத்  தயார்   ஆனேன்.   சார் !  ஒரு   நிமிஷம் !   என்றார் .

அடுத்த   மாசத்தில்   இருந்து   நான்   ஊருக்குப்   போய்விடுவேன்.  என்று   பீரோவில்   இருந்து   ஒரு   கவரை  எடுத்தார்.  சார்  இதப்  பாருங்க!   என்று வீடுகளின்  மாடல்களை   காண்பித்தார்.   என்னப்பா!  இதல்லாம்  என்றேன்.   நான்   கட்டப்போற   வீட்டின்   மாடல்கள்!  இதுல   எனக்கு   இந்த  மாடல்   ரொம்ப   பிடிச்சிருக்கு!  என்று  ஒரு  வீட்டினை  காண்பித்தார்.

நல்லாதான்     இருக்கு   என்றேன்.  என்னப்பா  இதுப்   போலதான்  கட்டப் போறியா?  ஆமாம்   சார்!  அப்பா  கட்டின  மாடல்  எனக்குப்  பிடிக்கலை!  அதான்   இந்த  மாதிரி  என்றான்.  நான்    சொல்றேன்னு   தப்பா  நினச்சுக்காத உங்கப்பா   இப்பதான்   ஒரு  வீட்ட  கட்டி   ஆறு  வருஷம்  கூட   ஆகலை!  

நான்  என்  விருப்பத்துக்கு   அத  இடிச்சி  கட்டப்  போறேன்  என்றான்.  என்னப்பா!   இப்படி   பண்றே!  அந்த   வீட்ட  கட்ட   உங்கப்பா என்ன  என்ன பாடுபட்டாறோ?!  இப்படி    மணல்   தட்டுப்பாடு   உள்ள  நிலையில   அத  இடிச்சி கட்டித்தான்    ஆகணுமா?  எத்தனைப்   பேரோட  உழைப்பு   அதுல  இருக்கு! இப்படித்தான்  நானும்  என்  இஷ்டத்துக்கு   இந்த  வீட்ட   கட்டினேன்    என்னாச்சு! கலவை  சரியாகாம!   ஒரு   ஆணி  அடிச்சாலே    செவுத்தில  விரிசல்   விடுது!  

இன்னும்    ஒரு     இருவது  வருஷம்    ஆகட்டும்!  அப்புறம்   உன்  இஷ்டத்துக்கு கட்டுவியாம்   என்றேன்.