About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Saturday 20 October 2012

ARTICLE - CELL

                                                            CELL   



cell   is  the  basic  unit  of  every organism.Each and every organism  is made  up of cell. There  are  two  types  of  cells  namely Prokaryotic  cell and  Eukaryotic   cell. Robert  Hooke, an optic  seller  discovered  cell  in 1665 .
   PROKARYOTIC  CELL:






                                                                        
                Bacteria   is  an example  for  Prokaryotic  cell  type. It  is  made up of  single  cell. It has  a cell-wall. It gives protection   and   shape  to  bacteria. Inside the  cell wall  there  is  protoplasm.  Protoplasm  is  divided  into  cell- membrane,  nucleus,  and  cytoplasm. In the cytoplasm many ribosomes  are scattered  because of absence of nuclear membrane. Other cell  organelles  like  golgi bodies,  mitochontria  are  absent .               Nucleus     is  round shaped D.N.A. There  is no  well  defined  nucleus  and    nuclear membrane is  absent. 
EUKARYOTIC  CELL:
 
                                                         
                                                                           

                    Plants  and  animals are   examples  for  Ukaryotic  cell. Plants and animal  are made up of  many cells. For an example, in an animal cell the   outer most covering  is plasma membrane . Plasma membrane gives size and protection to the animal cell. Inside the plasma membrane there  is protoplasm. Inside the protoplsam it has two components namely cytoplasm and nucleus.There   is  well  defined   nucleus  and  nucleus   is  surrounded  by   nuclear   membrane.Other cell   organelles  like  golgi bodies, mitochontria,  endoplasmic  reticulum, ribosomes,lysosomes, centrosome, vaculoles    are  present to perform specific function. Thus,   eukaryotic  cell  is  the complete  cell.   There are few difference between  an  animal cell and a plant cell.                 

கட்டுரை- செல்

                      ெல்                                   

         ஒவ்வொரு உயிரின் அடிப்படை அலகு செல்லாகும். எல்லா உயிர்களும் செல்களால் ஆனவை. செல்கள் புரோகேரியோடிக் செல் மற்றும் யூகேரியோடிக் செல்  என இருவகைப்படும்.     ராபர்ட் ஹூக்  1665ல்  செல்லைக் கண்டறிந்தார். இவர் ஒரு கண் கண்ணாடி வியாபாரி ஆவார்.


  புரோகேரியோடிக்  செல் :

                                                      



             பாக்டீரியாவின் செல்  அமைப்பு  புரோகேரியாட்டிக்  செல்  வகையை  சார்ந்தது  ஆகும். பாக்டீரியா ஒரு செல்லால் ஆனது. இதற்கு  செல்சுவர்   உண்டு. செல்சுவர் இதற்கு பாதுகாப்பையும், வடிவத்தையும் கொடுக்கின்றது. செல்சுவருக்குள்  உள்ள உயிருள்ளப் பொருட்கள்  புரோட்டோப்பிளாசம்  என்றழைக்கப்படுகிறது. புரோட்டோப்பிளாசம்  ஆனது  செல்சவ்வு,  நியூக்ளியஸ்  பொருட்கள்  மற்றும் சைட்டோப்பிளாசம் என்றுப் பிரிக்கப்பட்டுள்ளது. சைட்டோப்பிளாசத்தில் ரிபோசோம்கள் உட்கரு உறை இல்லாததால் பரவிக் காணப்படுகின்றன.  நியூக்ளியஸ் பொருட்கள் வட்டவடிவிலான டி.என் ஏ. ஆகும். இது  உட்கரு உறையால் சூழப்படவில்லை. செல்லின் மற்றப்  பகுதிப் பொருட்களான கோல்கை உறுப்புக்கள், மைட்டோக்காண்ட்ரியா லைசோசோம்  போன்றவை காணப்படுவதில்லை.

யூகேரியோடிக் செல்:

                                                                  
          
                    யூகேரியோடிக் செல் அமைப்பிற்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செல் அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  தாவரங்களும்  விலங்குகளும்  பல செல்களால் ஆனவை. இவற்றில் விலங்கின் செல் அமைப்பினை எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு வெளிப்புற  உறை பிளாஸ்மா உறை ஆகும். பிளாஸ்மா உறை விலங்கு செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. பிளாஸ்மா உறையின் உள்ளே  புரோட்டோப்பிளாசம் காணப்படுகிறது. புரோட்டோப்பிளாசத்தில்  சைட்டோப்பிளாசம், நியூக்கிளியஸ் போன்ற இரண்டு செல் உறுப்புக்கள் காணப்படுகின்றன . இவற்றில்  நியூக்ளியஸ் செம்மையாகவும், வட்ட  வடிவத்தில்  நியூக்ளியர்  உறையால் சூழப்பட்டுள்ளது. மேலும் செல்லின் மற்றப் பகுதிப் பொருட்களான கோல்கை உறுப்புக்கள் மைட்டோக்காண்ட்ரியா,எண்டோபிளாமிக் வலைப்பின்னல் , லைசோசோம், ரிபோசோம்கள், செண்ட்ரோசோம், வாக்கியூல்கள்  போன்றவைக் காணப்படுகின்றன. இவை ஒவ்வென்றிற்கும் குறிப்பிட்டப் பணிகள் உள்ளன. அதாவது  முழுமையான செல் என்றால் அது யூகேரியோடிக் செல்தான். விலங்கின்  செல் அமைப்பும்  தாவர செல் அமைப்புக்கும்   சில வேறுபாடுகள் உண்டு.


                                            விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday 2 October 2012

கட்டுரை- உ.வே.சாமிநாதய்யர்.

  

                                                                    .வே. சாமிநாதய்யர்




        
                                                                       





                                                                                                  





       தமிழ்  மொழியை வளர்க்கப் பாடுபட்டவர்களுள்  தமிழ்த் தாத்தா  உ.வே.சுவாமிநாத  ஐயர்  மிக  முக்கியமானவர். அவர்  இல்லை என்றால்       பனை ஓலை வடிவத்தில்  அழிந்துக்  கொண்டிருந்த  பழம் பெரும்  நூல்களை நாம்  யாரும்  படித்திருக்க  முடியாது. இன்று  நமக்கு காகித வடிவில் பல நூல்களை  அச்சிட்டு  பல நூல்களை காப்பாற்றி  நமக்குத் தந்த  நம் உ.வே. சாமிநாதய்யர், தன் தள்ளாத வயதிலும்  தமிழுக்காக பாடுபட்டார். அதனால் அவருக்குத் தமிழ்த்தாத்தா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 
                                                                                            
    
       அவர்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் 19.2.1855 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி   ஆவர். இவர்  தன்   ஆரம்பக் கல்வியை  தன் கிராமத்திலும், பின்பு   தனது 17ம்  வயதில் இருந்து ஐந்து வருடங்கள்  இவருடைய ஆசான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரிடமும் பயின்று தமிழ் அறிஞர் ஆனார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டார்.எனவே   அவருக்கு  உ.வே.சா என்றப் பெயர்  ஏற்பட்டது. பின்பு தமிழ்  ஆசிரியர் ஆனார்.
      உ.வே.சா அவர்கள்  3000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும். கையெழுத்தேடுகளையும்   சேகரித்தார் . மேலும், 90க்கும்  மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளுக்கு  நூல்  வடிவம்  கொடுத்தார்.  பல உரை  நடை நூல்களையும்  எழுதி  அச்சிட்டார்.

     உ.வே.சா அவர்கள் தனது அச்சுப் பணியால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வெண்பா நூல்கள் போன்ற பல நூல்களை பதிப்பித்து உள்ளார்.
        உ.வே.சா அவர்களின் பெயரால் 1942 இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல்  நிலையம்  இன்றும்  சென்னையில்  உள்ள  பெசன்ட்   நகரில்  செயல்பட்டு வருகிறது.  அவரின்   தமிழ்த்  தொண்டை  நம்   நாட்டினர்  மட்டும்  அல்லாது   வெளிநாட்டு  அறிஞர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
       உ.வே.சா அவர்களின்   தமிழ்த்தொண்டினை  பெருமைப் படுத்தும் வகையில் 2006ம்  ஆண்டு  நடுவண்   அரசு அவரின் அஞ்சல்தலை  வெளியிட்டுச்    சிறப்பித்து உள்ளது.