அந்தக் கல்யாண மண்டபம் களைக் கட்டியிருந்தது.
ஏதோ செட் போட்ட மாதிரி இருக்கே! என்று பலரும்
சொல்லியவாறு சாப்பிடச் சென்றனர். மணமகளின் முகத்தில் அத்தனை சந்தோஷம் இல்லை. இந்தக்
கல்யாணம் அவசியந்தானா? என்று மனம் நினைத்தது.
என்ன பொண்ண கொஞ்சம் சிரிக்கச் சொல்லுங்க! கல்யாணத்தில பொண்ணுக்கு இஷ்டம் தானா? என்று
ரகுவின் அம்மா சொல்ல அதைக் காதில் வாங்கிக்
கொள்வதாக இல்லை. ஏனோ இன்னமும் மனம் பாஸ்கரை நினைத்துக் கொண்டிருந்தது.
ஏன் இந்த நேரத்தில் நினைக்கிறோம்! என்று தன்னை கடிந்துக் கொண்டாள். ரகுவிற்கும் மனம்
கல்யாணத்தில் இல்லை. மாலதியை நினைத்துக் கொண்டிருந்தான். அம்மாவிடம் சற்று நேரம் கேட்டிருக்கலாமோ?
முகூர்த்த நேரம் ஆச்சு! பொண்ணக் கூப்பிண்டு வாங்கோ! என்று வாத்தியார்
சொல்ல எல்லாரும் ரம்யாவைத் தேடினர். ரம்யாவைக் காணவில்லை!என்று ரம்யாவின் அப்பா சொல்ல! என்ன சார்
இப்படி பொண்ண விட்டுட்டு நிக்கறீங்களே! என்ன செய்யறது? அவளுக்கு இந்தக் கல்யாணத்திலும்
இஷ்டம் இல்லதான் நானும்தான் படிச்சுபடிச்சு
சொன்னேனே இப்ப என்ன ஆச்சு? தன் புருஷனை மறக்க முடியாம இருந்தவள இரண்டாம் கல்யாணம் பண்ணிக்க சொன்னா இப்படிதான்
ஆகும் என்றார் ரம்யாவின் அப்பா. கரெக்டு சார்! அப்புறம் என்னாலயும் என் முதல் மனைவி மாலதிய மறக்க முடியல! நானும் போறேன்! அப்புறம் இந்த சந்தோஷமான நாள்ல எல்லாரும்
நாங்க நாலுப் பேரும் நல்லா இருக்கணும்னு மனசார
வாழ்த்திவிட்டு சாப்டுட்டுதான் போகணும்! என்று கிளம்பினான் ரகு.
No comments:
Post a Comment