About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Friday 9 November 2012

சிறுகதை- வைரங்கள் எங்கே?

                                                      

           
              
           அந்த நகைக் கடையில் முதல் தளம்  வைரத்திக் கென்றே பிரத்தேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் வருவோர்,போவோர் என்று கடையே பிசியாய் இருக்க!  ஒரு மணிவாக்கில் செந்தில் முதல் தளத்தில் இருந்து ஓடி வந்தான். கல்லாவில் சுந்தர்  கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டு இருக்க என்ன  சார்! உங்க கூட கொஞ்சம் தனியாப் பேசணும்!  அர்ஜண்ட் சார்! என்றான். தரைத் தளம் தங்க நகைகளுக்கும்,பட்டுப் புடவைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்க வாசலில் பொம்மை வணக்கம் சொல்லிக் கொண்டு இருந்தது.


         என்னடா என்ன ஆச்சு? என்று தன் அந்த மதிய உணவு வேளையையும் மறந்தவராய் அருகில் இருந்த ஒரு அறைக்குள் இருவரும்  சென்றனர். சார்! இரண்டு வைரக்கல்லக் காணம்! என்னடா சொல்றே?! ஆமாம் சார்! ரெண்டுப் பேர் முதல்ல சாம்பிள் கல்லக் காட்டுங்கனாங்க! நானும் காட்டினேன்!. அப்புறம் ஒரு மூக்குத்தி எடுத்தாங்க! நான் கல்ல பத்திரமா செல்புல தான் வெச்சேன். அவங்கள அனுப்பி வெச்சுட்டு செல்புல பாக்கறேன்.!ரெண்டுக் கல்லயும் காணேம்! என்னடா சொல்றே! காமிராவும் காலையில இருந்து வேல செய்யல! கடவுளே! கிட்டத்தட்ட மூணு இலட்சம் மதிப்புள்ள கல்லக் காணுமே! என்ன செய்ய! ஆமாம் நீயே ஏதாவது தில்லு முல்லுப்பண்ணிருந்தா மரியாதயா சொல்லு! இல்ல போலீசக் கூப்பிடுவேன்!என்று மிரட்டினார் செந்திலிடம்! நான் போய் இப்படிப் பண்ணுவேனா சார்? அப்புறம் உங்ககிட்டயே வந்துச் சொல்லுவேனா சார்! காணம்னு சொன்னவன் மேல பழியப் போடறீங்களே! அங்க அஞ்சுப் பேரு! கீழ பத்துப் பேருன்னு பதினஞ்சுப் பேர் இருக்காங்க! சந்தேகப்பட்டா எல்லாரையும் சந்தேகப்படணும்!


               செக்யூரிட்டி கதவப் பூட்டு! என்று கட்டளை இட்டபடி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு ஃபோன் போட்டார் சுந்தர். கொஞ்ச நேரத்தில் மஃபிடியில் இன்ஸ்பெக்டர் இரவீந்தர் வர! எல்லாரையும் நிற்கச் சொல்லி சோதனைப் போட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை.


      நீதான் இங்க வா! என்றார் கடைசியாய்  முத்துவை! எதுக்கு இந்த மாதிரிப் பண்ணினே? என்றார். போய் பொம்மை ஷீல இருக்கற வைரக் கல்ல நீயே எடுத்திட்டு வா! என்றார். எதுக்கு நான் எடுக்கணும்? நான் வெக்கவே இல்லயே! பிஸ்டலை வைத்து மிரட்ட அடிப்பணிந்தான் முத்து! இவந்தான் குற்றவாளின்னு எப்படிக் கண்டுப்பிடிச்சீங்க? என்று எல்லாரும் ஒரேக் குரலில் கேட்க நான் வந்ததிலிருந்தே அவனுக்கு மனசு உள்ள இல்ல! வெளியில இருந்தது. நான் கடைக்கு வரும் போதே  பாத்தேன் பொம்ம நார்மலா நிக்கல! புடவ மடிப்பு  நீட்டா இல்ல!எனக்கு அப்பவே சந்தேகம்! என்று பொம்மையின் ஷீவைக் கழட்டி  அதில் இருந்த வைரக் கற்களை எடுத்து  சுந்தரிடம் குடுக்க! அவர் பரிசோதித்து எடுத்து ஆமாம் சார்! இது வைரக் கல்லுதான்! என்று கண்களில் ஒற்றிக் கொண்டார்.! ஏண்டா உனக்கு இந்த திருட்டு புத்தி! அப்போ கேமிராவை நீதான் ரிப்பேர் பண்ணி வெச்சியா?! என்று அடிக்க ஆரம்பித்தனர் அனைவரும்!

                                                 விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

2 comments: