About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Friday 18 July 2014

சிறுகதை- விலை ஏற்றம்


                                       

 

என்னங்க!  தண்ணி   லிட்டர்  நூறு  ரூபாய்க்கு வந்திடிச்சு! தண்ணி   குடிக்க கூட   மனசு  வர   மாட்டேங்குது!  என்று அலமேலு  பேப்பரைப்  பிரித்தார்.  என்னங்க  அநியாயம்!  தண்ணீர்   கொள்ளையர்கள்   கைது!    இப்படி இருக்கற   தண்ணீயயும்   திருடிகிட்டுப்  போயிட்டாங்கனா  தண்ணிய  வெறும்  அடுத்தவன்  கண்ணீர்ல   தான் பாக்கணும்! போலிருக்கு!

அம்மா   இனிமே   வாரத்தில   ஒரு நாளாவது  குளிக்கணுமாம்! இல்லேனா  ஆயிரம்  ரூபா  அபராதமாம்! அதுமட்டும் இல்ல! ஸ்கூல்ல  குடிநீர்  கட்டணம்  இன்னும்  ஆயிரம்  ரூபா  ஏத்திட்டாங்க என்று  மகள் சொல்ல! தலை  சுற்றியது  அலமேலுவிற்கு!  ஆமாம்!   எல்லா   கேன்லயும் தண்ணி  இருக்கா? நான் வெளியூர்  போகணும்! என்று கணவன் முத்து   கேட்க  இருக்கறது போதும்! இதுக்கே எத்தன தான் செலவு பண்றது? என்று கதவைச் சாத்தினாள். அடுத்த நாள் காலையில் வீட்டில் இருந்த தண்ணீர் கேன்கள்  தண்ணீருடன் காணாமல் போக  கணவனுக்கு போன்  போட்டார்.  என்ன அலமேலு!? இப்படி பண்ணிட்ட  நாந்தான் போகும்போது படிச்சு   படிச்சு   சொன்னேனே!  கதவ பத்திரமா சாத்திக்கன்னு!  விடிய விடிய முழிச்சிக்கிட்டு இருன்னு! இப்ப அம்பதியாயிரம்   பெருமானமான  தண்ணீர்  இல்ல  காமாணப் போச்சு! நக இல்லியே!  என்று அழ ஆரம்பிக்க உங்களுக்கு  இதுவே   வேலையாப் போச்சு!  பெட்ரோல்   வில  ஏறிப்   போச்சுன்னு  ரொம்ப  நேரமா  நீங்க டிவிப்   பாத்திட்டு   இருக்கும்   போதே   நினைச்சேன்  இந்த மாதிரி ஏடா கூடமா   கனவு   காணுவீங்கன்னு! என்று கணவனை எழுப்பினார் அலமேலு!

 

No comments:

Post a Comment