பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகபுற்று நோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பவாய்
புற்று நோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகிறது.
இப்பொழுது பெண்கள் உபயோகிக்கும் மாதாந்திர
நாப்கின்கள் பற்றி பல பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன.
அவற்றில் உள்ள நச்சுப் பொருட்களான பாலிகான்
என்றப் பொருள் பஞ்சை பிளீச்சிங் செய்வதால் தோன்றுகின்றது. இவை கர்ப்பவாய் புற்றுநோயை
ஏற்படுத்த காரணமாய் இருக்கின்றன. மேலும் மலட்டுத்தன்மை, எடை மற்றும் மூளை வளர்ச்சிக்
குறைபாடுடைய குழந்தை பிறத்தலுக்கும் இந்த நச்சுப்பொருள் காரணம் ஆகின்றன இந்த மாதிரியான
மறுசுழற்சி முறையில் பீளிச்சிங் செய்து விற்கப்படும் நாப்கின்களால் ஏராளமானோர் தங்கள்
கர்ப்பபையை இழந்துக் கொண்டு வருகின்றனர். அதில் ஈரப்பதத்தை உறிச்சிக் கொள்வதற்காக வைக்கப்படும்
பெட்ரோல்ஜெல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. இதற்கு பதிலாக அதிக சுகாதாரத்
தன்னையான நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும்.
மாதாந்திர நேரத்தில்தான் அதிக தற்கொலைகள்
நடப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே அந்த மூன்று நாட்களில் பெண்கள் அதிக படபடப்புடனுடனும்,
கோபத்துடன் காணப்படுவது ஹார்மோன்கள் செய்யும் மாற்றத்தால் தான் . அந்த தினங்களில் கடுமையான
வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும், டென்ஷன் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
வீட்டில் மற்றவர்கள் அவருக்கு அதிக கோபம் மனஅழுத்தம்
தராத வரையில் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். அதிக மாதவிடாய், ஒழுங்கற்ற இடைவெளியில்
மாதவிடாய், வயிற்றுவலி, காய்ச்சல், எடை குறைவு, உறவுப்பின் இரத்தம் தோன்றுதல் போன்றவை
இதன் அறிகுறிகள் ஆகும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது கர்ப்பபையை ஸ்கேனிங் செய்வது
அவசியம் ஆகும்.. கர்ப்பவாய்ப் புற்றுநோயை முதல் கட்டங்களில் கண்டறிந்தால் குணப்படுத்துதல்
எளிது ஆகும். இது தாக்கிய பாதி சதவீதம் பெண்கள் உயிர் இழக்கவும்
செய்கின்றனர்.
No comments:
Post a Comment