உன் பிம்பம் மட்டும் ஏனோ தெரிவதில்லை!
எங்கு மறைத்து வைத்தாய் என்றேன்!
தண்ணீரிடம்! உந்தன் நிறம் வெண்மையா?
கருமையா? பச்சையா? என்றேன் உன் முகத்தின்
நிறம் என்றாள் தண்ணீர்! என்னைப் பார்த்து! உன்னைப் போல்
சல சலவென்று ஓடமுடியவில்லை! என்றேன் ஓடித்தான்
பாரேன்! என்றாள்! என்னால் முடியவில்லை! நீ இல்லை என்றால்
என்னாலும் ஓடத்தான் முடியாது! உன்னையே நம்பியே வாழ்கிறேன்
என்றேன்!
பணிவாய்! அப்பொழுது பெய்த மழையில் நானும்,
தண்ணீரும் கலங்கியபடி சென்றடைந்தோம் ஓடையாய்! ஆனால்
என்னை மட்டும் விட்டுவிட்டு சென்றுவிட்டாள்! என் தோழி
ஏய் இங்கப் பாரு! எவ்வளவு அழகானப் பூ! பாத்து சேறு ஒட்டாமல்
என்றாள் !
இன்னோரு குழந்தை!
அந்தப் பிஞ்சு கரங்கள்
என் முகத்திற்கு அருகே வருகையில்! ஆனந்தத்தில்
மிதக்க
முடியாமல்
தவித்தேன்! மண்ணாகிய நான்!
No comments:
Post a Comment