இப்போதெல்லாம் உங்களோட போக்கு
எனக்குப் பிடிக்கலை! என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? என்று ஆரம்பித்தாள் கலா. எல்லாம்
நீங்க சொல்ற மாதிரிதான் நடக்கணுமா? நான் சொன்னா என்ன வேணாலும் கேப்பார் என் அப்பா! என்றாள்
கண்களில் கண்ணீர் பெருக! ஏன் நடக்காது? நீதான் உங்க வீட்டுக்கு
ஒரே செல்லப்பெண் ஆச்சே! என்ன இப்படி சொல்றீங்க? பின்ன நான்தான் வீட்ல கடைசிப் பையன், என் அம்மா அப்பா பேச்சுக்கு எதிர்பேச்சு பேசக்கூடாதுன்னு சின்ன வயசிலேயே மனசுல பதிய
வெச்சுட்டாங்க. புடிச்சுதோ புடிக்கலையோ, எங்க அப்பாவை மீறி ஒரு வார்த்த பேசினது இல்ல
முடிவும் எடுத்ததில்ல. அவர் வெச்சதுதான் சட்டம்.அப்பா இறந்துபோன பின்னாடி அண்ணனை கேட்டுதான்
எல்லாம் செய்யணும்னு அம்மா சொன்னதுனால அம்மாவையும் அண்ணனையும் கேட்டுட்டுதான் எல்லாமும்
செய்யணும்!. இப்பதான் அம்மா அண்ணனின் வீட்டுக்குப் போயிட்டாங்களே! அய்யோ பாவம்! இனி நீங்க வெச்சதுதான் சட்டம்! என்றாள் கலா தன் கணவனை பரிதாபமாக பார்த்தபடி!
No comments:
Post a Comment