About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Saturday, 20 October 2012

கட்டுரை- செல்

                      ெல்                                   

         ஒவ்வொரு உயிரின் அடிப்படை அலகு செல்லாகும். எல்லா உயிர்களும் செல்களால் ஆனவை. செல்கள் புரோகேரியோடிக் செல் மற்றும் யூகேரியோடிக் செல்  என இருவகைப்படும்.     ராபர்ட் ஹூக்  1665ல்  செல்லைக் கண்டறிந்தார். இவர் ஒரு கண் கண்ணாடி வியாபாரி ஆவார்.


  புரோகேரியோடிக்  செல் :

                                                      



             பாக்டீரியாவின் செல்  அமைப்பு  புரோகேரியாட்டிக்  செல்  வகையை  சார்ந்தது  ஆகும். பாக்டீரியா ஒரு செல்லால் ஆனது. இதற்கு  செல்சுவர்   உண்டு. செல்சுவர் இதற்கு பாதுகாப்பையும், வடிவத்தையும் கொடுக்கின்றது. செல்சுவருக்குள்  உள்ள உயிருள்ளப் பொருட்கள்  புரோட்டோப்பிளாசம்  என்றழைக்கப்படுகிறது. புரோட்டோப்பிளாசம்  ஆனது  செல்சவ்வு,  நியூக்ளியஸ்  பொருட்கள்  மற்றும் சைட்டோப்பிளாசம் என்றுப் பிரிக்கப்பட்டுள்ளது. சைட்டோப்பிளாசத்தில் ரிபோசோம்கள் உட்கரு உறை இல்லாததால் பரவிக் காணப்படுகின்றன.  நியூக்ளியஸ் பொருட்கள் வட்டவடிவிலான டி.என் ஏ. ஆகும். இது  உட்கரு உறையால் சூழப்படவில்லை. செல்லின் மற்றப்  பகுதிப் பொருட்களான கோல்கை உறுப்புக்கள், மைட்டோக்காண்ட்ரியா லைசோசோம்  போன்றவை காணப்படுவதில்லை.

யூகேரியோடிக் செல்:

                                                                  
          
                    யூகேரியோடிக் செல் அமைப்பிற்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செல் அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  தாவரங்களும்  விலங்குகளும்  பல செல்களால் ஆனவை. இவற்றில் விலங்கின் செல் அமைப்பினை எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு வெளிப்புற  உறை பிளாஸ்மா உறை ஆகும். பிளாஸ்மா உறை விலங்கு செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. பிளாஸ்மா உறையின் உள்ளே  புரோட்டோப்பிளாசம் காணப்படுகிறது. புரோட்டோப்பிளாசத்தில்  சைட்டோப்பிளாசம், நியூக்கிளியஸ் போன்ற இரண்டு செல் உறுப்புக்கள் காணப்படுகின்றன . இவற்றில்  நியூக்ளியஸ் செம்மையாகவும், வட்ட  வடிவத்தில்  நியூக்ளியர்  உறையால் சூழப்பட்டுள்ளது. மேலும் செல்லின் மற்றப் பகுதிப் பொருட்களான கோல்கை உறுப்புக்கள் மைட்டோக்காண்ட்ரியா,எண்டோபிளாமிக் வலைப்பின்னல் , லைசோசோம், ரிபோசோம்கள், செண்ட்ரோசோம், வாக்கியூல்கள்  போன்றவைக் காணப்படுகின்றன. இவை ஒவ்வென்றிற்கும் குறிப்பிட்டப் பணிகள் உள்ளன. அதாவது  முழுமையான செல் என்றால் அது யூகேரியோடிக் செல்தான். விலங்கின்  செல் அமைப்பும்  தாவர செல் அமைப்புக்கும்   சில வேறுபாடுகள் உண்டு.


                                            விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment