தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபட்டவர்களுள் தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் மிக முக்கியமானவர். அவர் இல்லை என்றால் பனை ஓலை வடிவத்தில் அழிந்துக் கொண்டிருந்த பழம் பெரும் நூல்களை நாம் யாரும் படித்திருக்க முடியாது. இன்று நமக்கு காகித வடிவில் பல நூல்களை அச்சிட்டு பல நூல்களை காப்பாற்றி நமக்குத் தந்த நம் உ.வே. சாமிநாதய்யர், தன் தள்ளாத வயதிலும் தமிழுக்காக பாடுபட்டார். அதனால் அவருக்குத் தமிழ்த்தாத்தா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
அவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் 19.2.1855 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி ஆவர். இவர் தன் ஆரம்பக் கல்வியை தன் கிராமத்திலும், பின்பு தனது 17ம் வயதில் இருந்து ஐந்து வருடங்கள் இவருடைய ஆசான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரிடமும் பயின்று தமிழ் அறிஞர் ஆனார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டார்.எனவே அவருக்கு உ.வே.சா என்றப் பெயர் ஏற்பட்டது. பின்பு தமிழ் ஆசிரியர் ஆனார்.
உ.வே.சா அவர்கள் 3000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும். கையெழுத்தேடுகளையும் சேகரித்தார் . மேலும், 90க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளுக்கு நூல் வடிவம் கொடுத்தார். பல உரை நடை நூல்களையும் எழுதி அச்சிட்டார்.
உ.வே.சா அவர்கள் தனது அச்சுப் பணியால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வெண்பா நூல்கள் போன்ற பல நூல்களை பதிப்பித்து உள்ளார்.
உ.வே.சா அவர்களின் பெயரால் 1942 இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் செயல்பட்டு வருகிறது. அவரின் தமிழ்த் தொண்டை நம் நாட்டினர் மட்டும் அல்லாது வெளிநாட்டு அறிஞர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினை பெருமைப் படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு நடுவண் அரசு அவரின் அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்து உள்ளது.
vgood i use 2016 in grade 7
ReplyDeletevgood i use 2016 in grade 7
ReplyDelete