புத்தம் புதிய ஆடை
உன் பழைய ஆடைகளை
உதிர்த்துவிட்டு ஏன் பச்சைப்பசேல்
என்ற புதிய ஆடைகளைத்
தேர்ந்தெடுத்தாய்? வரும் வெயில்
காலத்தில் பழைய ஆடைகள்
வெயில் தாங்காதென்றா ! அல்லது
புது ஆடைகள் வெயிலில்
எதிரொளிக்க கதிரவன் அதன் அழகில் மயங்கி
தன் வெம்மையைக் குறைக்கத்தானோ
இப்புது ஆடைகள்!!!
கடவுள்
குழந்தை முதல்
பெரியவர் வரை அனைவருக்கும்
சமமான சந்தோஷத்தைத்
தரும் ஒரேக் கடவுள் மலர்களே!
No comments:
Post a Comment