உணவு வலை
இவ்வுலகில் எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன.அவை நம் கண்ணுத்தெரியாத வலையை உண்டுப் பண்ணுகின்றன.
உணவு வலையில் முதலாவதாக வருபவை தாவரங்கள். அவற்றில் முதலில் வருபவை பாசிகள் மற்றும் பூஜ்ஜைகள்.
1.பாசிகள் பச்சை நிறம்
கொண்டவை.இவை மிகப்
பழமையானத்
தாவரங்கள்
ஆகும். இவை பச்சை, பழுப்பு,
சிவப்பு,மற்றும் நீலப்பச்சை
நிறம்
கொண்டுள்ளன. இவைகளில்
உல்வா, லேமினாரியா, சர்காஸம் போன்றவை
மனிதர்கள் மற்றும் நாய்ப்போன்ற
வீட்டு விலங்குகளுக்கும் நல்ல உணவாகின்றன.
பூஜ்ஜைகளுக்கு பச்சையம் இல்லாததால் அவை ஒட்டுண்ணிகளாவோ,
சாற்றுண்ணிகளாகவோ தன் வாழ்க்கையை நடத்துகின்றன. பென்சிலியம்நொட்டேட்டம் என்றப்
பூஞ்ஜையிலிருந்து எதிர்
உயிரி மருந்தான பென்சிலின்
தயாரிக்கப்படுகிறது.
2 . மாஸ் எனப்படும் பிரையோபைட்டுகள் முதன் முதலில் நீரில் இருந்து நிலத்தில் வாழும் தகவமைப்பை பெற்றிருக்கின்றன. நீரிலும், நிலத்திலும் வாழும் இவை நீரின்றி இனப்பெருக்கம் செய்ய இயலாது. இவை கம்பளம் போல் மண்ணைப் போர்த்திக் கொள்வதால் மண்ணிப்பைத் தடுக்கின்றன. உலர்த்தப்பட்ட பீட் மாஸ் மற்றும் ஸ்பாக்கனம் எரிபொருளாக பயன்படுகின்றன.
3.சாற்றுக் குழாய்க் கற்றையைப் பெற்று முதன் முதலில்
நிலத்தில் வாழ்பவை பெரணிகளாகும். இவை
ஜூராசிக்காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றன.
இவற்றின் இலைகள் மிகவும் அழகாக உள்ளதால்
இவை அழகுத்தாவரங்களாக
வளர்க்கப்படுகின்றன. மார்சிலியா
உணவாகப் பயன்படுகிறது.
4.
சைக்கஸ், பைன் போன்றவை தண்டு
, இலை வேர் வேறுபாடுகள் உள்ள
உடலம். இவை திறந்த
விதைத் தாவரங்கள் ஆகும். இவை ஜிம்னோஸ்பெர்ம் என்றத் தொகுதியின்
கீழ் வருபவை ஆகும்.
ஜிம்னோஸ்பெர்ம்களில் பைன் ,செங்கட்டை,ஃபிர்,
போன்றவைகள் மரச்சாமான்கள், பென்சில் மற்றும் தீக்குச்சிகள்
தயாரிக்கப் பயன்படுகின்றன.
அரக்கேரியா (குரங்கின் புதர் ) பசுமை மாறாத
அழகுத்
தாவரங்களாகும்.
. 5. பூக்களின் பெரியதொரு தொகுதியாக ஆஞ்சியோஸ்பெர்ம்கள் உள்ளது.
மனித வாழ்விற்கு ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மிக இன்றியமையாதன.உணவு, உடை,மருந்து, மரக்கட்டை,நார்கள் ஆகியவற்றுக்கு இவையே ஆதாரம்.இவற்றின் கீழ் வரும் அனைத்து வகையான நெல்,கோதுமை,சோளம் மற்றும் பட்டாணி மற்றும் மா,அவரை போன்ற எல்லா ஒருவிதையிலை இருவிதையிலை தாவரங்களும் மனித வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதன ஆகும். இது ஏறக்குறைய 2,60,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
மனித வாழ்விற்கு ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மிக இன்றியமையாதன.உணவு, உடை,மருந்து, மரக்கட்டை,நார்கள் ஆகியவற்றுக்கு இவையே ஆதாரம்.இவற்றின் கீழ் வரும் அனைத்து வகையான நெல்,கோதுமை,சோளம் மற்றும் பட்டாணி மற்றும் மா,அவரை போன்ற எல்லா ஒருவிதையிலை இருவிதையிலை தாவரங்களும் மனித வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதன ஆகும். இது ஏறக்குறைய 2,60,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
தாவரங்களினால் கிடைக்கும் பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
காய்கள் மற்றும் கனிகள் இயற்கை நமக்களித்த பரிசு. ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களை நாம் உண்ணுவதன் மூலம் நோயில்லா வாழ்வை வாழலாம்.
1.மரங்கள் மாசுகலந்த காற்றினை சுத்தப்படுத்தி நல்ல காற்றினை நமக்கு தருகின்றன.
2.நாம் வெளியிடும் கார்பன் –டை-ஆக்சைடை உறிஞ்சிக் கொள்ளவதால் உலக வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.
3.மண் அரிப்பைத் தடுக்கவும், மழை வளம் பெருக்கவும் மரங்களின் பயன் மிக மிக இன்றியமையாதன.
4.மரங்கள் மனிதனுக்கு மட்டுமன்றி பூச்சிகள்,புழுக்களுக்கும் தன் இலையை உணவாகத் தருகின்றன. பறவைகள் கூடுகட்டி வாழ்வதற்கும், மற்றும் விலங்குகளுக்கும் உணவையும், நிழலையும் தருகின்றன.
5.மனித வாழ்கைக்கு மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் பயன் சொல்லிமாளாது. சாதாரண சளி ,காய்ச்சலிருந்து உயிர்க் காக்கும் சஞ்சீவி மருந்து வரை தாவரங்களின் பயன் சொல்லிமாளாது.
நுண்ணுயிர்களின் பங்கு:
மனிதனுக்கு வைரஸ், பாக்டீரியா , பூஞ்ஜைகள் பல நோய்களைத் தந்தாலும் அவைகளால் ஏற்படும் நன்மைகளே அதிகம்.பாக்டீரியாக்கள் நான்கு வடிவங்களில் காணப்படும்.இவை எல்லா இடங்களிலும் காணப்படும்.மனிதனின் தோல் மற்றும் குடல்பகுதியில் எண்ணில்லா பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.அவை பரவ மனிதன் மற்றும் விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகவாகவோ கடத்திகளாக செயல்படுகின்றனர் .
1. தாவர வேர்மூண்டுகளில் ,கிளாஸ்டிரிடியம் ,ரைசோம் போன்ற பாக்டீரியாக்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்வளத்தைப் பெருக்குகின்றன. லாக்டோபேசில்லஸ் லேக்டிஸ் என்ற பாக்டீரியா பாலைத் தயிராக மாற்றுகிறது. மற்றும் தோல் பதனிடும் தொழில்சாலைகளிலும் பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன.
2. சாற்றுண்ணிப் பாக்டீரியாக்கள் மற்றும் பூஜ்ஜைகள் இறந்த
தாவர மற்றும் விலங்கு உடல்களைச்
சிதைக்கின்றன
.இதன் விளைவால்
துர்நாற்றம் ஏற்பட்டு மனிதனுக்கு ஒரு உயிர் இறந்துப்
போயிருக்க கூடும் என்று உணர்த்துகின்றன.
எனவே இவைகள்
இயற்கைத்
துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பாக்டீரியாவிலிருந்து எதிர் உயிரிஉயிரி மருந்து
ஸ்டெப்ரப்டோமைசின் மற்றும்
பாசிட்ராசின் போன்றவை பெறப்படுகின்றன.
மேலும்
வேளாண்மைத்
துறையில் உயிரியல்
கட்டுப்பாட்டிற்கு பேசில்லஸ் துரிஞ்ஞினிசிஸ் என்ற பாக்டீரியா பயன்படுகிறது.
3. வைரஸ்கள் உயிரியல் ஆய்வுக் கூடக் கருவிகளாக பயன்படுகின்றது.
நுண்ணுயிர்கள் மனித குலத்திற்கும், தாவரத்திற்கும் பெரும் நன்மைகளைத் தருகின்றன. இவ்வாறாக மனிதன் நுண்ணுயிர்களையும் நுண்ணுயிர்கள் மனிதன் ,தாவரங்களையும் சார்ந்திருக்கின்றன .மனிதன் ஆடு, மாடுகள் ,கோழிகள், போன்றவற்றை தன்னுடைய உணவுத் தேவைகளுக்காவும், சமூகத் தேவைகளுக்காவும் சார்ந்துள்ளான்.
3. வைரஸ்கள் உயிரியல் ஆய்வுக் கூடக் கருவிகளாக பயன்படுகின்றது.
நுண்ணுயிர்கள் மனித குலத்திற்கும், தாவரத்திற்கும் பெரும் நன்மைகளைத் தருகின்றன. இவ்வாறாக மனிதன் நுண்ணுயிர்களையும் நுண்ணுயிர்கள் மனிதன் ,தாவரங்களையும் சார்ந்திருக்கின்றன .மனிதன் ஆடு, மாடுகள் ,கோழிகள், போன்றவற்றை தன்னுடைய உணவுத் தேவைகளுக்காவும், சமூகத் தேவைகளுக்காவும் சார்ந்துள்ளான்.
பட்டுப்பூச்சி, தேனீக்கள், மண்புழு போன்றவை மனிதனுக்கு கிடைத்த இயற்கைப் பரிசு.
எனவே இதிலிருந்து தாவரங்கள் –மனிதர்கள்- விலங்குகள் நுண்ணுயிர்கள் –ஒன்றை ஒன்று சார்ந்து உணவு வலையை உண்டுப் பண்ணுகின்றன.
1.மனிதனுக்கு தாவரங்களும் ,தாவரங்களை உண்டு வாழும் புழு,பூச்சிகளுக்கும் , மான், ஆடு,மாடு, முயல் போன்றவற்றுக்கும் உணவாகின்றன.
2. இப்பூச்சிகளையும் ,புழுக்களையும் தவளைகள் மற்றும் பறவைகள் உணவாக உட்கொள்கின்றன.ஆடு மாடுகள் மனிதனுக்கும், சிங்கம் ,புலி போன்றவற்றுக்கும் உணவாகின்றன.
3.தவளைகளையும்,எலிகளையும் பாம்புகளும்,பறவைகளும் உணவாக உட்கொள்ளும். பாம்புகளை கீரிகளும்,சில பறவைகளும், கழுகுகளும் உணவாக உட்கொள்கின்றன.
4.கழுகுகளோ, மற்ற உயிர்களோ இறக்க நேரிடும்போது நுண்ணுயிர்கள் அவற்றை சிதைத்து இப்புவியை தூய்மைப்படுத்துகின்றன. இவ்வாறு இயற்கை எல்லா உயிர்களுக்கு உணவு கிடைக்கவும், உயிரினங்கள் அளவிற்கு மேல் பெருகிவிடாமல் , அதே சமயம் அடியோடு அழிந்து விடாமல் இருக்கவும் இயற்கையாக அமைந்த உணவுச் சங்கிலிகளால் ஆன இந்த உணவு வலை மிகமிக இன்றியமையாதது ஆகும். இவ் உணவு வலையானது தாவரங்களிலிருந்து தொடங்குகின்றது. எனவே இதன் மூலம் இப்பூமியில் தாவரங்களின் பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது தெளிவாகிறது. தாவரங்கள் உணவை உண்டு பண்ண சூரியன் துணைப்புரிகின்றார்.அவர் எல்லாவற்றுக்கும் முதலில் உள்ளார்.
தாவரங்கள் எளிதில் பெருகிப் பரவபூச்சிகளும்
பறவைகளும் , மனிதர்களும் இயற்கையாக எளிதில்
துணைப்புரிகின்றனர்.
வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் , எறும்புகள் பறவைகள் போன்றவை
அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
பழங்களை
உண்ணும்
பறவைகளின் எச்சங்களின்
மூலம் விதைகள் பரவுகின்றன ,முளைக்கின்றன.
இயற்கையாக சில தாவரங்களின் விதைகள்
காற்று,நீர் இயற்கைக் காரணிகளால் ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில்
கடத்தப்பட்டு அவை மரமாவோ
,செடியாகவோ முளைத்து இன்னோரு
உணவு வலை அங்கு இயற்கையாகத்
தோன்றுகின்றன.
இயற்கையில் அமைந்த இந்த உணவு வலையை மனிதன் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கின்றான். மரங்களை வெட்டுதல்,விலங்குகளை வேட்டையாடுதல் போன்றவை இவ்வுணவு வலையை சீர்குலைக்கும். எனவே மரங்கள், விலங்குகள், பறவைகளையும் கண் எனப் பாதுகாப்பது நமது கடமையாகும்.எனவே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ல் இயற்றப்பட்டது. இந்தியாவில் 89 தேசியப் பூங்காக்களும், 500க்கும் மேற்பட்ட சரணாலயங்களும் உள்ளன.
இயற்கையில் அமைந்த இந்த உணவு வலையை மனிதன் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கின்றான். மரங்களை வெட்டுதல்,விலங்குகளை வேட்டையாடுதல் போன்றவை இவ்வுணவு வலையை சீர்குலைக்கும். எனவே மரங்கள், விலங்குகள், பறவைகளையும் கண் எனப் பாதுகாப்பது நமது கடமையாகும்.எனவே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ல் இயற்றப்பட்டது. இந்தியாவில் 89 தேசியப் பூங்காக்களும், 500க்கும் மேற்பட்ட சரணாலயங்களும் உள்ளன.
BEST ARTICLE AND PICTURES ARE GOOD.
ReplyDeletethank you very much.
Deleteகட்டுரை நல்ல தகவல்களைக் கொண்டுள்ளது. நன்றி.
ReplyDeleteI WANT SOME NATURE FOOD
ReplyDeleteThank
ReplyDelete