அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றவுடன், அவனும், அவளும் ஏறினர். அவன் கிட்டத்தட்ட அவளை பஸ்சிற்குள் தள்ளிவிட்டான். ஹை!நம்ம ரெண்டுப் பேருக்கும் சீட் கிடச்சிடுச்சு! சீட் கிடச்சிடுச்சு! என்று ஒருக் குழந்தைப் போல தன் இருக் கைகளையும் தட்டிக் கொண்டாள். உஷ்! சத்தம் போடக் கூடாது ! என்று அவன் அவளை அதட்ட சரி! சரி என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .ரெண்டு சேலம்! என்று டிக்கெட் வாங்கிக் கொண்டான். ஏன்? அந்த மரமெல்லாம் நம்மப் பின்னாடியே வருது! என்று கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.அதுக்கும் உன்கூட வரணுமாம்! நீ எண்ண ஆரம்பி! என்றான் அவசரமாய்!
அதற்குள் பின்னால் இருந்த பெரியவர் என்ன தம்பி இது!? எத்தனை நாளா இந்த மாதிரி இருக்குது இந்தப் பொண்ணு! ? என்று அனுதாபத்தில் கேட்க ஆரம்பித்தார். எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறே மாசந்தான் ஆச்சு! சார்! போன மாசம் நானும் இவளும் பைக்ல போனப் போ ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்த மாதிரி ஆயிடுச்சு! என்றான் வருத்தத்தில்!
சிறிது நேரத்தில் அடுத்த ஸ்டாப்பில் சிலர் இறங்கிக் கொண்டிருக்கும் போது படார்! என்று ஒருச் சத்தம்! பெரியவர் ஒருவர் நல்லவேள இந்த ஸ்டாப்ல டயர் வெடிச்சுடுச்சு! நான் வேற பஸ்ஸப் பிடிச்சுப் போறேன்! என்று இறங்க! எல்லாரும் டயர் வெடிச்சுடுச்சு! என்று முணுமுணுத்தப்படி இறங்க ஆரம்பித்தனர். ஹை! எல்லாருமே ஏமாந்திட்டீங்களா! நாந்தான் இந்த கவர ஊதி ஒடச்சேன்! என்று கையில் இருந்த பிளாஸ்டிக் கவருக்கு முத்தம் கொடுத்தாள். தயவு செஞ்சு எல்லாரும் உக்காருங்க! டயரும் வெடிகல! ஒண்ணும் வெடிக்கல! சார் மரியாதயா நீங்க அந்தப் பொண்ணக் கூட்டிக்கிட்டு பஸ்ஸ விட்டு இறங்கிடுங்க! நீங்க ரெண்டு பேரும் ஏற்ர லட்சணத்தப் பாக்கும் போதே சந்தேகப்பட்டேன்! என்று கண்டெக்டர் கத்த ஆரம்பித்தார்.
சார்! சார்! இன்னும் ஒரு மணி நேரம் தான் சார்! நான் எப்படியாவது இவங்க எதுவும் செய்யாமப் பாத்துக்கறேன்! என்று கண்டெக்டரின் காலில் விழாதக் குறையாக அவன் கெஞ்சிக் கொண்டிருக்கையில், அவள் கண்டெக்டரின் பேகை சட்டென்று உறுவிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.அம்மாத் தாயே!அதுல இருக்கற பணத்த மட்டும் ஒண்ணும் பண்ணிடாதே! என்று கண்டக்டர் தலைத் தெரிக்க அவள் பின்னால் ஓட ஆரம்பித்தார்.அவள் அதற்குள் அருகில் இருந்த பழக்கடைக்குள் நுழைந்து முன்னால் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஆப்பிள் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைக்குள் வீச ஆரம்பித்தாள். ஷாட் ரெடி! ஒரேக் டேக்ல பிரம்மாதமா நடிச்சிட்டீங்க! என்று டைரக்டர் கையைக் கொடுக்க தாங்க்யூ சார் ! என்று கையில் இருந்த ஆப்பிளை சுவைக்க ஆரம்பித்தார் நடிகை பத்மா.
Very good and funny story. I like it.
ReplyDelete