பழமை
என்னடா பண்றது? இந்த அப்பாவோட பெரிய தொந்தரவா போச்சு! எனக்கு என்னமோ இது சரியாக படலை! இப்பவே எல்லாரும் நம்மளப்பாத்து சிரிக்கற மாதிரி தோணுது!இந்த தடவை நம்ம தப்பிக்க முடியும்னு எனக்குத் தோணல!. இதப்போய் லேட்டஸ்டு ஃபேஷன்னுவேற ஊர்முழுக்க பீத்தல் வேற? நாலுநாள் லீவுல என்னதான் செய்யறதுன்னு தெரியல!
வாங்கடா! வாங்க! உங்களுக்கு நான் குடுத்த கெடு இன்னையோட முடியுது!இதுல மரியாதையா உங்களோட கையெழுத்தை மட்டும் போடுங்க!மத்தத உங்க பசங்களை வெச்சு என் வேலலைய நானே முடிச்சுக்கறேன். அவங்களுக்காவது, எந்த எந்த சொந்தம் எந்த ஊர்ல எந்த விலாசத்தில் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கட்டும்! என்ன பொங்கல் வாழ்த்தில் கையெழுத்தைப் போடணும்! அவ்ளோதானே! என்று வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டனர் இருவரும். ஏண்டா, இந்த ரிட்டெர்ய்டு போஸ்ட் மாஸ்டரின் பசங்களாட நீங்க? இத்தனை சலிப்பு! பொங்கல், தீபாவளி இந்த வாழ்த்தோட ஆரம்பிச்சா எவ்ளோ சந்தோஷம் வரும் தெரியுமா? நீங்க ரெண்டுப் பேரும் என்னமோ எல்லாத்தையும் மறந்துட்டு உக்காந்திட்டு இருக்கீங்க!
ஏண்டா! சுரேஷ் நீ பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி நான் ஆபிஸிலிருந்து எப்போ வருவேன்!? என்று வாசலில் காத்திருப்பாயே! உனக்கு நினைவு இருக்கிறதா? ம்! நினைவு வருது அப்பா, உழவர், காளை மாட்டோடு, சூரியனோடும் இருக்கறது, இயற்கைக்காட்சிகள் இவையெல்லாம் மாமாக்கு, தாத்தாக்கு, சித்தப்பாக்கு, பெரியப்பாவுக்குன்னு நானும் இவனும் வகையார பிரிச்சு அனுப்பினதெல்லாம் நினைவுக்கு வருதப்பா!
என்னை மன்னிச்சிடுங்கப்பா! என் பழைய நினைவை தூண்டி, நான் பெற்ற அளவில்லாத ஆனந்தத்தை என்னை மறுபடியும் அடைய வெச்சிட்டீங்க! ஆமாம்பா! நீங்க சொல்றது உண்மைதான் ஒருத்தருக்கு வாழ்த்து அனுப்பும்போதும், ஒருத்தர்கிட்ட இருந்து வாழ்த்து பெறும் போதும் அந்த ஆனந்தம் தனிதான் அப்பா!
அப்பா! வாழ்த்து வாங்கப் போலாம் வாங்க! டேய்! இதையெல்லாம் இவ்வளவு நேரம் சுவாரஸியமாக கேட்டுக்கிட்டு இருக்காங்க பார்! என் பேரக் குழந்தைகளை வாழ்த்துமடல் வாங்க கூட்டிக்கிட்டு போடா! என்றதுதான் தாமதம்! நாந்தான் முதல்ல செலக்ட் செய்வேன்! நீ அட்ரஸ் மட்டும் தான் எழுதணும்!என்றக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
No comments:
Post a Comment