About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

20684

Tuesday, 18 December 2012

சிறுகதை- முதல் நாள் பாடம்


 

 
 
 
                                                    
 
           ரம்யா!  சீக்கிரம்! என் கண்ணில்ல!  என்று  முதன் முதலாக பள்ளிக்கு  செல்லும் தன் மகளை கிளப்பத்  தயாரானாள்   லட்சுமி.
           இன்னைக்கி  என் பட்டுக்குட்டி   முதன் முதலா  ஸ்கூலுக்கு    போகப்போறாளாம்! சீக்கிரம் ! எழுந்திருமா! என்று எழுப்பினாள் .  இன்னைக்கி  மத்தக் குழந்தைங்க எல்லாம்  அழுதா  நீயும் அழக்கூடாது!  அம்மா கிளாஸ்க்கு வெளியேதான் நின்னுட்டு  இருப்பேனாம்!   ஒன்  அவர் கழிச்சு நம்ம வீட்டிற்கு  வந்துடலாம்!   என்றபடிகொஞ்ச நேரத்தில் மகளை கிளம்பிவிட்டாள்  .
 
      என்ன ரெண்டு  பேரும் கிளம்பிட்டீங்களா?  என்று  கேட்ட கணவனிடம்  கொஞ்சம் வேலையிருக்குங்க! என்றபடி தன் முதல் மகன் சுந்தரின்  பழைய  பேகில்  இருந்து ,பழைய சிலேட், பழைய வாட்டர் பாட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.  உனக்கென்ன  பைத்தியமா? நேத்திக்குதான் எல்லாம் புதுசு வாங்கினோம் ! என்று கத்தினார் கணவன்  சேகர்.  முதல்ல அதல்லாம்   ரம்யாக்கு  எடுத்துவை!
     கொஞ்சம் பொறுங்க! இப்படிதான் நம்ம  சுந்தர்க்கு  ஆசையாய்  வாங்கினோம்!
      என்னாச்சு! அம்மாகிட்ட  போணும்னே, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, எல்லாத்தையும் வீசி எறிஞ்சு, உடச்சு  கடசியில இது தெரியாம நானும் ,ஆயம்மாவும் புத்தம்  புதுசாச்சேன்னு  தேடி உடஞ்சதத்தான்  பத்து நிமிஷம் தேடி எடுத்தோம்!
      இவ அந்த அளவுக்கு பண்ணாம, ஆனா கிளாசில தொலசிட்டுதான்  வருவா! ரெண்டு  நாள் போகட்டும் !
      ஏன்னா! முதல்நாள் குழந்தைகளுக்கு மட்டும் இல்ல  பாவம்! டீச்சர், ஆயம்மா  எல்லாருக்கும் ஒரு சிரம்மமான நாள்தான்.
      அப்புறம்  முக்கியமானத நான்  மறந்திட்டேன் ! என்று  சுந்தரின் புக் லேபிளை  சின்ன சின்னதாய்  வெட்டி ஒவ்வென்றிலும்  ரம்யா  எல்.கே.ஜி .யென்று எழுதி  எல்லாவற்றிலும்  ஒட்டினாள்.  இது சீக்கிரமா தேட உதவும்  என்றாள்    லட்சுமி!
        முதல்நாளே! உன்னால நல்லாதான்  பாடம் படிச்சுட்டாங்க  உங்கம்மா! என்றார் கணவன்  சேகர்   தன் மகனைப் பார்த்து சிரித்தார் கிண்டலாக!!ஆமாம்பா! அம்மா நேத்திக்கே எல்லாம் சொன்னாங்க!  அண்ணா எத்தனை நாள்  உன் வாட்டர் பாட்டிலக் கேட்டேன்!  குடுத்தியா?  எப்படி! என்று சந்தோஷத்துடன்  பள்ளிக்கு  கிளம்பினாள்  ரம்யா!                 
 
 

     

No comments:

Post a Comment