சிறுகதை_ வாடகை வீடு
என்ன சார்? இந்த மாச வாடகையை என் கணக்கில போட்டுடீங்களா ? என்று வீட்டு உரிமையாளர் கைப்பேசியில அழைத்த பொழுது சரவணுக்கு படபடவென இருந்தது! சார்! கொஞ்சம் பொறுத்துகுங்க சார்! அடுத்த மாசம் சேத்துப் போட்டுடறேன்! என்றான் . சரி ! சரி! என வைத்தார் சதாசிவம்! என்னங்க ! குடியிருக்கறவங்க என்ன சொன்னாலும் சரி! சரிங்கறீங்க!
என்ன சதாசிவம் சார்! எப்படி இருக்கீங்க ? என்று மணிமாறன் வீட்டிற்குள் நுழைந்தார். நல்லா இருக்கோம் ! என்றார். என் பொண்ணு கல்யாணத்த வர்ற தையில் வெச்சிருக்கேன் .வீட்ட கொஞ்சம் காலி பண்ணிக் குடுத்தீங்கனா நல்லா இருக்கும் என்றார். சரிங்க! சார்! என்றார் சதாசிவம்.
No comments:
Post a Comment