சிறுகதை_ மணல்
அந்த கடிதத்தை குமார் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது கடலின் அலைகள் சீற்றத்தோடு அவன் நெஞ்சில் மோதியது போல் இருந்தது, ஈரமணலை எடுத்து ஆத்திரத்தோடு வீசினான். என்ன தம்பி!
காதல் தோல்வியா? என்றான் மீனவன் கையில் வலையோடு நின்றிருந்தான். அமாம் ! என்றான் வயற்றெரிச்சலோடு! தம்பி ! துக்கமும் இந்த ஈரமணல் மாதிரிதான் அதப்பத்தி நினைக்க, நினைக்க , நம்ம மனசில ஒட்டிக்கும்! துக்கத்த விடுங்க தம்பி ! அப்பத்தான் அது இந்த காஞ்ச மணல் மாதிரி நம்ம மனசில ஒட்டாது! என்றான் . அந்த மீனவன் சொன்னது குமாருக்கு அப்பொழுது ஒரு ஆறுதலைத் தர, வீட்டை நோக்கி நடந்தான்.
No comments:
Post a Comment