கட்டுரை _ கொரோனா
கொரோனா! இதை உச்சரிக்காத மனிதனே இல்லை என்கிற அளவிற்கு இவ்வுலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு வைரஸ் . இது பசை உள்ள ஒரு ஒட்டுண்ணி ஆகும். அதனால்தான் கைகளை அதிக சோப்பு போட்டு கழுவச் சொல்கின்றனர் வல்லுனர்கள். மார்ச் மாதம் முதல் ஆரம்பித்த இதன கோரமான ஆட்டம் இன்னமும் அடங்காமல் உயிர்களை பலி வாங்கியபடி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. இது வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. முதலில் தொண்டையைத் தாக்கும் நேரத்திலேயே நாம் அதிக சுடுநீர் உட்கொண்டு தினமும் நான்கு தடவை ஆவிப் பிடித்தல் , தினமும் நான்கு முறை தேனீர் குடித்தல் போன்ற செயல்களால் இதனை நாம் இது நுரையீர்லை தாக்கும் முன்பே அழித்துவிடலாம் என் சீன மக்கள் சொல்கின்றனர். அதனால் நாம் தினமும் துளசி, மிளகு, மஞ்சள் போன்ற எளிய பொருட்களை கொண்டு கஷாயம் போட்டுக் குடித்தால் நாம் சளி , இருமல் தொல்லை வராமல் தடுக்கலாம். இது காற்றின் வழியே பரவுகின்றது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. அதனால் வெளியில் செல்லும் பொழுது முககவசம் கட்டாயம் அணியவேண்டும். சமூக இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.
No comments:
Post a Comment